தெற்கு ரயில்வேயின் சேலம் பிரிவின் வணிக மேம்பாட்டுப் பிரிவு தொடர்ந்து வணிக நடவடிக்கைகளைத் தக்கவைத்து மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில், மருந்துகள், கொசு வலைகள் உள்ளிட்ட பொருள்கள் கரூரிலிருந்து ஒடிசாவின் மஞ்சேஸ்வர், குர்தா சாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, இன்று (நவ.07) சேலம் பிரிவு கொசு வலைகள் கரூரிலிருந்து ஒடிசாவின் சம்பல்பூர் நகரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
42 வேகன்களில் ஏற்றப்பட்ட 2,658 டன் எடையுள்ள கொசு வலைகள், தற்போது கொண்டு செல்லப்பட உள்ளன. இதன் மூலம் தெற்கு ரயில்வேக்கு 51 கோடியே 20 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.