அமானிகொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சபீனா. இவர், தான் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தன்னிடம் ஒரு பவுன் தங்க நகை அளித்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும் கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைகளை வாங்கியுள்ளார். சிலருக்கு வங்கி கடன் வாங்கி தருவதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார்.
இவர்களிடம் நகையைப் பெற்ற பிறகு தனது வீட்டை மாற்றியுள்ளார். தங்களுடைய நகை குறித்த தகவலும் கிடைக்காமல், பணமும் வராததால் பலரும் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்துள்ளனர்.
இதையடுத்து நகையை பறிகொடுத்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான கருப்புப் பணம் புழங்குவதாகவும், அவற்றை ஆய்வு செய்யுமாறும் வலியுறுத்தினர்.
இந்த புகாரையடுத்து, காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து சபீனாவின் கணவர் ரங்கநாதனிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், சபீனா ஆட்சியர் அலுவலகத்தில்தான் பணிபுரிந்தாரா என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோடிக்கணக்கில் மோசடி: பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர், மனைவியுடன் தலைமறைவு!