ETV Bharat / state

'மாற்றத்தை மக்கள் நீதி மய்யம் உருவாக்கும்' - கமல்ஹாசன் - 'MNM will create change' - Kamal Haasan

சேலம்:தமிழ்நாட்டில், மக்கள் நீதி மய்யம் மற்றத்தை உருவாக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
author img

By

Published : Jan 3, 2021, 6:25 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கடந்த மாதம் மதுரையில் தனது முதல்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வந்த அவர், சேலத்தில் தனது நான்காம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்.

சேலம், வேலூர் மாவட்டங்களில் இன்று (ஜன.3 ) முதல் ஜன.6ஆம் தேதிவரை தேர்தல் பரப்புரையில் கமல்ஹாசன் ஈடுபடுகிறார்.

இதற்காக இன்று மதியம் 3 மணியளவில், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்த கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அதனைத் தொடர்ந்து சேலம் அழகாபுரம் பகுதியில் தேர்தல் பரப்புரையின் போது பேசிய கமல்ஹாசன்," நான் செல்லும் இடமெல்லாம் எனக்கு இதே வரவேற்பும் அன்பும் கிடைக்கிறது. மக்கள் நீதி மய்யம் நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும்" என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை

பின்னர் அங்கிருந்து அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு சென்ற அவர், ஏற்காடு ஏரிக்கரை ரவுண்டானா பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் காஃபி தோட்ட தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.

இதையும் படிங்க: மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? - கமல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.