ETV Bharat / state

ராஜேந்திர பாலாஜிக்கு 1.5 டன் ஸ்வீட் பார்சல் - வழங்கியது எப்படி? - Rajendra Balaji

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

minister-nasar-criticized-1500-kg-of-avin-sweets-given-free-to-rajendra-balaji-as-diwali-gift-last-year
'ராஜேந்திர பாலாஜிக்கு 1.5 டன் ஸ்வீட் பார்சல்' - வழங்கியது எப்படி?
author img

By

Published : Jul 4, 2021, 12:00 PM IST

Updated : Jul 4, 2021, 1:30 PM IST

சேலம்: சித்தனூர் அருகேயுள்ள ஆவின் பால் பண்ணையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று (ஜூலை.04) ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பால், பால் பொருள்கள் உற்பத்திப் பிரிவு, பால் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், "கடந்த ஆட்சியின்போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

ஆவின் நியமனத்தில் முறைகேடு

குறிப்பாக, 234 பேர் முறைகேடாகப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி அவர்களை பணி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும். ஆவினில் 636 முதுநிலை, இளநிலை ஆலைப் பணியாளர்களை நியமிக்க முறைகேடாகப் பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து, அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் நாசர்

அந்தப்பணியிடங்களுக்கு புதிதாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.

ராஜேந்திர பாலாஜியும் 1.5 டன் ஸ்வீட்டும்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டிற்குத் தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முன்னதாக சேலம் மாநகரப் பகுதிகளில் செயல்பட்டுவரும் ஆவின் விற்பனை நிலையங்களை அதிகாலை நேரத்தில் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு முடித்துவைப்பு

Last Updated : Jul 4, 2021, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.