சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சேகோசர்வ் என்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள், கண்காணிப்பு குழுக்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று (நவ.10) நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் இணைந்து திறப்பதற்காகச் சென்றனர்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு, புகைப்படக்கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க அமைச்சர் தா.மோ.அன்பரசனை ஒருமையில் அழைத்ததோடு, 'எந்த வேலையும் செய்யாமல் இருப்பதற்கு நீ ஒரு மந்திரியா' என்று கேட்டார்.
இது அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஏற்கெனவே, அமைச்சர் கே.என்.நேரு மீது சென்னை மேயரை ஒருமையில் பேசிய சர்ச்சை உள்ள நிலையில், தற்போது மீண்டும் சக அமைச்சரை அவர் ஒருமையில் பேசிய சம்பவம் குறித்த வீடியோ திமுகவினர் மத்தியில் மற்றும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் இடம் கிடைப்பது சவால்: அமைச்சர் பொன்முடி கூறிய காரணம்?