ETV Bharat / state

பள்ளி மாணவ, மாணவிகள் சாலை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - அமைச்சர் கே.என்.நேரு..! - மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர்

Minister K.N.Nehru distributed cycles for school students: சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 1.27 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 6:48 PM IST

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு மலர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று(டிச.16) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு 2ஆயிரத்து 642 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 1.27 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கல்வி முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அமைச்சரவையில் நான் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, பள்ளி மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் பாதுகாப்பாகப் பள்ளிக்கு வருகைதர வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு இடங்களில் பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டது. அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்திற்குச் சென்றுவர ஏதுவாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 11-ஆம் வகுப்பு பயின்ற 8ஆயிரத்து 852 மாணவர்களுக்கும், 13ஆயிரத்து 127 மாணவிகளுக்கும் என மொத்தம் 21ஆயிரத்து 979 மாணாக்கர்களுக்கு ரூபாய் 10.59 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

தற்பொழுது சேலம் மாவட்டத்தில் 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 181 பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 11ஆயிரத்து 551 மாணவர்களுக்கும், 14ஆயிரத்து 648 மாணவிகளுக்கும் என மொத்தம் 26ஆயிரத்து 199 மாணாக்கர்களுக்கு ரூபாய் 12.63 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

அந்தவகையில், இன்றைய தினம் சேலம், சிறு மலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நெத்திமேடு ஜெயராணி அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சேலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பாவடி நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, சிறு மலர் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

மணக்காடு காமராஜர் நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, சி.எஸ்.ஐ. அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மரவனேரி புனித பால் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மரவனேரி பாரதி வித்யாலயா அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2023-24ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயிலும் ஆயிரத்து 232 மாணவர்கள் மற்றும் ஆயிரத்து 410 மாணவிகள் என மொத்தம் 2ஆயிரத்து 642 மாணாக்கர்களுக்கு ரூபாய் 1 கோடி 27 லட்சத்து 48ஆயிரத்து 400 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

விலையில்லா மிதிவண்டிகளைப் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றி மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும்" என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தொப்பூர் கணவாய் சாலை விபத்துகளை தடுக்க தீர்வு.. ரூ.775 கோடியில் அமைகிறது 'மேம்பால சாலை' - தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.