ETV Bharat / state

சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்ட தொழிலாளர்கள்!

சேலம் : கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 16 பேருந்துகளில் வந்திருந்த சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 479 தொழிலாளர்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தங்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்ட தொழிலாளர்கள்!

author img

By

Published : May 11, 2020, 9:34 AM IST

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்து மூலம் அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பிற மாநில தொழிலாளர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், பிற மாநிலங்களில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலார்களை அம்மாநில அரசுகளின் அனுமதியோடு இங்கு அழைத்து வருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநில அரசு தெரிவித்திருந்தது.

இதனடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரிந்துவந்த தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 479 தொழிலாளர்கள் 16 சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று முன்தினம் இரவு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு வந்தடைந்தனர்.

அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றி அவர்களை அவரவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். இதுதொடர்பாக சமந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பபட்ட பேருந்து

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 27 தொழிலாளர்கள் கரூப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துவதற்கான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கின்றதா என்பதை கண்டறிவதற்கான ஸ்வாப் பரிசோதனையும் செய்யப்படும்.

பரிசோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் பட்சத்தில், அவர்களை தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கி அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும், அவர்களை சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.

மேலும், சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 173 தொழிலாளர்களை, அம்மாநிலத்திலிருந்து வந்திருந்த 16 பேருந்துகளின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரிலிருந்து ரயில் மூலம் இன்று திருச்சிக்கு வந்த, சேலம் மாவட்டத்தை சேர்ந்த 49 தொழிலாளர்களை பேரூந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு, கரூப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துவதற்கான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் கரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கின்றதா என்பதை கண்டறிவதற்கான ஸ்வாப் பரிசோதனையும் செய்யப்படவுள்ளது" என்று ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.திவாகர், காவல் துறை, சேலம் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் பார்க்க: முழு பேரழிவுக்கு வித்திட்ட ட்ரம்ப் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.