ETV Bharat / state

நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழப்பு!

சேலம் : ஐந்து ரோடு அருகே ஒரு வீட்டில், நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

midnight-fire-five-members-of-the-same-family-killed

author img

By

Published : Sep 4, 2020, 1:23 PM IST

சேலம், ஐந்து ரோடு அருகேவுள்ள நரசோதிப்பட்டி பகுதியில் வசித்து வரும் சகோதரர்கள் அன்பழகன் (வயது 50), கார்த்திக் (வயது 40). இவர்கள் சேலத்தில் மர அறுவை ஆலை நடத்தி வருகின்றனர். அன்பழகன், கார்த்திக் இருவரும் தங்களது மனைவி, பிள்ளைகளுடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று (செப்.03) நள்ளிரவு அவர்களது வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இது குறித்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர், வீட்டிற்குள் சிக்கி இருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் இந்த விபத்தில் தரை தளத்திலிருந்த கார்த்திக், அவரது மனைவி மகேஸ்வரி (வயது 35), மகன்கள் சர்வேஷ் (வயது 12), முகேஷ் (வயது 10), அன்பழகனின் மனைவி புஷ்பா (வயது 40) ஆகிய ஐந்து பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் உயிருக்குப் போராடி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அன்பழகன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்தத் தீ விபத்தின்போது மேல் தளத்தில் வசித்து வந்த அன்பழகனின் பெற்றோர் மற்றும் மகள் சௌமியா (வயது 17) ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழப்பு

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இந்தத் தீவிபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ராமன், மாநகரக் காவல் ஆணையர் செந்தில் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகரின் மையப்பகுதிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : முன்பனிக்காலத்தை வரவேற்கும் பூக்கள் - மஞ்சள் மயமான கொடைக்கானல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.