ETV Bharat / state

உபரிநீர்த் திட்டம்: இழப்பீட்டு தொகை வழங்கிய ஆட்சியர்! - மேட்டூர் அணையின் உபரி நீர்

சேலம்: உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கு முதல்கட்டமாக ரூ.1.10 கோடி இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

உபரி நீர் திட்டம்: இழப்பீட்டு தொகை வழங்கிய ஆட்சியர்!

author img

By

Published : Dec 9, 2020, 6:35 AM IST

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரிநீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகளுக்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கு அரசின் இழப்பீட்டுத் தொகை அவரவர்களின் வங்கிக் கணக்கிற்கு மின்னணு பரிமாற்றத்தில் அனுப்பப்பட்டதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மேச்சேரி சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் நேற்று (டிச. 08) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் ராமன், முதற்கட்டமாக 33 நில உரிமையாளர்களுக்கு மின்னணு பரிமாற்றத்தின் மூலம் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையின் ஆணைகளை வழங்கினார்.

பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "மேட்டூர் அணையின் உபரிநீரினை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கு குழாய் பதிக்கத் தேவையான மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய வட்டங்களில் 298 ஏக்கர் தனியார் பட்டா நிலங்கள் கையகப்படுத்த வேண்டியுள்ளது.

தற்போது முதற்கட்டமாக 33 தனியார் நில உரிமையாளர்களின் பட்டா நிலங்களுக்கான அரசின் இழப்பீட்டுத் தொகை ரூ.1.10 கோடி மின்னணு பரிமாற்றத்தில் உரியவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் மன்னர்கள் கொண்டாடப்படுவதில்லை' - நீதிபதிகள் வருத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.