ETV Bharat / state

மேட்டூர் அணை பூங்கா 2 நாள்கள் மூடல்! - சேலம் மாவட்ட செய்திகள்

கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் மேட்டூர் அணை பூங்கா நாளையும், நாளை மறுநாளும் மூடப்படுவதாக சார் ஆட்சியர் வீர் பிரதாப் சிங்  தெரிவித்துள்ளார்.

mettur-dam-park-closes-for-2-days
author img

By

Published : Jul 16, 2021, 9:31 PM IST

சேலம்: கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் மேட்டூர் அணைப்பூங்கா நாளையும், நாளை மறுநாளும் மூடப்படுகிறது. இதுதொடர்பாக சேலம் மாவட்டம் மேட்டூர் சார் ஆட்சியர் வீர் பிரதாப் சிங் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேட்டூர் அணை பூங்கா கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக வரும் 17.07.21 மற்றும்18.07.21 ம் தேதி வரை இரண்டு நாள்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

மேலும் காவிரி ஆற்றில் ஆடி 1 நீராடுதல் போன்ற நிகழ்வுகளுக்கும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.ஆண்டு தோறும் ஆடி மாதப்பிறப்பை ஒட்டி, மேட்டூர் அணை, அங்கு உள்ள பூங்காவிற்கு ஆடி முதல் நாளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடி, ஆடிப் பிறப்பை கொண்டாடுவார்கள்.

கரோனா காலம்

தற்போது கரோனா காலம் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவிலான பொதுமக்கள் வருகை தந்தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது . தற்போது தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாளை, நாளை மறுநாள் பொதுமக்கள் மேட்டூர் அணை,மேட்டூர் பூங்காவிற்கு பொதுமக்கள் வருகையை ரத்து செய்யும் விதமாக, மேட்டூர் அணை செயற்பொறியாளர் கடிதத்தின் வாயிலாக தெரிவித்தார்.இதனையடுத்து மேட்டூர் சார் ஆட்சியர் ஓம்வீர் பிரதாப்சிங் நாளை, நாளை மறுநாள் வாரத்தின் பொதுமக்களின் வருகையை ரத்து செய்து இன்று (ஜூலை.16) அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆடி மாத பிறப்பு

ஆடிப் பிறப்பு காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக ஆடி மாத பிறப்பையொட்டி ஆண்டுதோறும் சேலம், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேட்டூருக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும் அவர்கள் மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராடி அணைக்கட்டு முனியப்பசாமிக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்வார்கள்.

மேட்டூர் அணை நிலவரம்

இந்த ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாமல் உள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.43 அடியாக உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக உள்ளது.ஆண்டு தோறும் நடைபெறும் இந்த ஆடி விழா இந்த ஆண்டும் ஊரடங்கு காரணமாக பெரிய அளவிலான கொண்டாட்டம் இல்லாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

'வரும் தேர்தலில் 150 இடங்களில் பாஜக வென்று ஆட்சிக் கட்டிலில் அமரும்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.