ETV Bharat / state

'சாலைகளை சீர் செய்யவில்லையென்றால்...!' - எச்சரிக்கும் சேலம் எம்.பி. - எஸ்.ஆர்.பார்த்திபன்

சேலம்: களரம்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுக்கும் மேல் சீரமைக்கப்படாமல் இருக்கும் சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்யவில்லையெனில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் மாநகராட்சி அலுவலகத்தின் முன் போராடுவேன் என சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

S.R.Parthiban
author img

By

Published : Oct 21, 2019, 3:59 PM IST

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 44, 45, 57ஆவது வார்டு களரம்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக சீரமைக்கப்படாத சாலைகளால் நாளுக்குநாள் அப்பகுதி மக்கள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவியர் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர்.

எஸ்.ஆர். பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டபோது

தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்துவருவதால் சீரமைக்கப்படாத சாலைகளில் மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுவருகிறது. கடந்த பத்தாண்டுக்கும் மேல் இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனுக்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, அவர் இன்று சீரமைக்கப்படாத சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது அவரிடம் அப்பகுதி மக்கள் சாலை வசதி மட்டுமின்றி சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட பிரச்னைகளையும் முன்வைத்தனர்.

மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

"சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 44, 45, 57ஆவது வார்டு பகுதியான களரம்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சாலைகளை சுமார் ஒரு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். தினமும் இங்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அப்படிப்பட்ட சாலைகளை கடந்த 10 ஆண்டாக மாவட்ட நிர்வாகம் சீரமைக்க முன்வரவில்லை.

அது மட்டுமல்லாமல் இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிப்படைந்துவருகின்றனர். கடந்தாண்டுகூட டெங்கு காய்ச்சலால் இப்பகுதியைச் சேர்ந்த குழந்தை ஒன்று இறந்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தாண்டுகூட இப்பகுதி மக்களில் 30 லிருந்து 40 விழுக்காடு மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே இப்பகுதியில் உள்ள சாலைகள், சுகாதாரப் பணிகள் உள்ளிட்டவை இரண்டு மாத காலத்திற்குள் சரிசெய்யப்படவில்லை என்றால், ஐந்தாயிரம் பேருடன் மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவேன்" என்றார்.

இதையும் படிங்க: டெங்கு நோய்த்தடுப்பு பணியில் நூறுநாள் திட்ட பணியாளர்கள் - மாவட்ட ஆட்சியர்

Intro:சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட களரம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத சாலைகளை போர்க்கால அடிப்படையில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சீர் செய்ய வில்லை எனில் அப்பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Body:சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 44,45 மற்றும் 57 வது வார்டு பகுதியான களரம்பட்டி,பாரதி தெரு, தரணி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத சாலை நாள் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் சிதலமடைந்த சாலையில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாகவம் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபனுக்கு பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத சாலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி அதிகாரிகளுடன் எஸ் ஆர் பார்த்திபன் சீரமைக்கப்படாத சாலைகளில் நடந்து சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை சூழ்ந்துகொண்டு தங்கள் பகுதிகளில் சாலை வசதி மட்டுமின்றி சாக்கடை வசதி மற்றும் தெரு விளக்குகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட களரம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சேலம் மாநகராட்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்ன ஆயிற்று எனும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இதுகுறித்து தமிழக முதல்வர் சேலத்திற்கு வருகை தரும்போது அவரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்க உள்ளதாகவும் தெரிவித்த அவர் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் களரம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அப்பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேட்டி: எஸ்.ஆர்.பார்த்திபன்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.