ETV Bharat / state

மோசமான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி: சேலம் எம்.பி குற்றச்சாட்டு

சேலம்: அரசு தலைமை மருத்துவமனையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக சேலம் எம்.பி பார்த்திபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Oct 4, 2019, 7:18 PM IST

dmk mp parthipan

சேலம் மேற்கு மாவட்ட பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1,026 மக்கள் குறைதீர் மனுக்களை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்தபோது அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக ஒரு தெளிவான ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியரிடமும், தலைமைச் செயலாளருக்கும், சுகாதாரத்துறை செயலாளருக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், நாள் ஒன்றுக்கு 8,000 பொதுமக்கள் வந்து செல்லும் தலைமை அரசு மருத்துவமனையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. அங்கு போதுமான மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Intro:சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இது குறித்து தெளிவான ஆய்வு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடமும், தலைமை சுகாதாரத்துறை செயலாளருக்கும் அளித்துள்ளதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்...Body:
சேலம் மேற்கு மாவட்ட பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட 1026 மக்கள் குறைதீர் மனுக்களை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் கூறுகையில், தமிழகத்தில் டெங்கு கொசு உற்பத்தி ஆகிற முதலிடம் சேலம் தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்தான் எனவும், எடப்பாடி அரசு மாவட்ட மருத்துவமனையில் டெங்கு கொசு உற்பத்தி ஆவதுடன் அடிப்படை வசதிகளும் மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இன்றைய தினம் 1026 மக்கள் குறைதீர் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க அதிகாரிகளை பொதுமக்களை அழைத்து வந்து முதலமைச்சரிடம் மனு வழங்க வைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கூறுகையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைமையில் நேரில் ஆய்வு செய்தபோது அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் இது தொடர்பான ஒரு தெளிவான ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியரிடமும், தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கும், சுகாதாரத்துறை செயலாளருக்கும் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நாளொன்றுக்கு 8000 பொதுமக்கள் வந்து செல்லும் தலைமை அரசு மருத்துவமனையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததாலும், போதுமான மருத்துவர்கள் இல்லாததாலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேட்டி
எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்

VISUAL SEND TO MojoConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.