ETV Bharat / state

மயிலாடுதுறை-சேலம் தினசரி ரயில் சேவை ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் துவக்கம்! - ரயில்வே வாரியம்

Mayiladuthurai-Salem daily train service: மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரயிலாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

மயிலாடுதுறை-சேலம் தினசரி ரயில் சேவை ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் துவக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 12:10 PM IST

சேலம்: மயிலாடுதுறை - சேலம் இடையே, மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் சேவை, வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரயிலாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.இதன் மூலம் வண்டி எண் 16811, 16812 மயிலாடுதுறை-சேலம் இடையிலான மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் வரும் ஆகஸ்ட் 28 முதல் இயக்கப்பட உள்ளது.

வண்டி எண் 16811 மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு வழியில் தஞ்சாவூருக்கு காலை 8.01 மணிக்கு வந்து 8.04 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு வந்தடைகிறது. அங்கிருந்து 9.40 மணிக்குப் புறப்பட்டு கரூருக்கு 11.43-க்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து 11.45-க்குப் புறப்பட்டு நாமக்கல்லுக்கு 12.29 மணிக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து 12.30 மணிக்குப் புறப்பட்டு சேலத்திற்கு மதியம் 1.45 மணிக்கு வந்தடைகிறது.

வண்டி எண் 16812 சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில், சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்குப் புறப்பட்டு நாமக்கல்லுக்கு 2.54 மணிக்கும், கரூருக்கு 3.38 மணிக்கும், திருச்சிக்கு 5.55 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் திருச்சியில் இருந்து 6.05 மணிக்குப் புறப்பட்டு தஞ்சாவூருக்கு இரவு 7.15 மணிக்கும், மயிலாடுதுறைக்கு இரவு 9.40 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 2 சரக்கு பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட உள்ளது.

சிறப்பு ரயில்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஓசூர், தருமபுரி, சேலம், ஈரோடு வழியாக, பெங்களூரு- கொச்சுவேலி இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூரு- கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்.06565), பெங்களூருவில் ஆக.24 மதியம் 2.05 மணிக்குப் புறப்பட்டு, ஓசூர், தருமபுரி வழியாக சேலம் இரவு 7.55 மணி, ஈரோடு 9.15 மணிக்கு வந்து, மறுநாள் காலை 7.15 மணிக்கு கொச்சுவேலியை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொச்சுவேலி- பெங்களூரு சிறப்பு ரயில் (எண்.06566), கொச்சுவேலியில் ஆக.25 மாலை 6.05 மணிக்குப் புறப்பட்டு, ஈரோடு நள்ளிரவு 3.30 மணி, சேலம் அதிகாலை 5.07 மணிக்கு வந்து, தருமபுரி, ஓசூர் வழியாக, பெங்களூருவுக்கு மறுநாள் காலை 11 மணி அளவில் சென்றடைகிறது' என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவள விழா: முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.