ETV Bharat / state

உயிரிழந்த மாவோயிஸ்ட் உடலை ஊரில் புதைக்க எதிர்ப்பு! - maoist manivasagam shoot dead

சேலம்: கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறி ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

maoist
author img

By

Published : Nov 4, 2019, 7:50 PM IST

சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட மணிவாசகம் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தலைவராக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி கேரளா வனப்பகுதியில் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் மணிவாசகத்தின் சொந்த ஊரான காடையாம்பட்டி ராமமூர்த்தி நகர் பகுதியில் அவரது உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்கள்

மணிவாசகத்தின் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்ககூடாது என்று ஊர் மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளனர். உயிரிழந்த மாணிக்கவாசகத்தின் உடல் ஊருக்குள் புதைக்கப்பட்டால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆண்டுதோறும் மாவோயிஸ்டுகள் வரக்கூடும் என்றும், அப்போது ஊரில் உள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து தவறான பாதைக்கு மாவோயிஸ்டுகள் அழைத்துச் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறி அவரது உடலை ஊருக்குள் புதைக்க அனுமதியளிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க: மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாவோயிஸ்ட் இளைஞர்

Intro:கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சேலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறி, ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு........

நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ,மாவோயிஸ்டுகள் ஊருக்கும் வரக்கூடும் என்றும் மக்கள் அச்சம்........
Body:

சேலம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த மணிவாசகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே மாவோயிஸட் இயக்கத்தில் இணைந்து தலைவராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையை கடந்த 29ம் தேதி கேரளா வனப்பகுதியில் மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் மணிவாசகத்தின் சொந்த ஊரான ராமமூர்த்தி நகர் பகுதியில் அவர் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர்.

இந்தநிலையில் மணிவாசகத்தின் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்க கூடாது என்று ஊர் மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.மேலும் அவரின் உடல் ஊருக்குள் புதைக்கப்பட்டால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆண்டுதோறும் மாவோயிஸ்டுகள் வரக்கூடும் என்றும்,இதனால் ஊரில் உள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு உள்ளதால் அவர் உடலை ஊருக்குள் புதைக்கக் கூடாது என்று மனு அளித்தனர்.

(பேட்டி உள்ளது
visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.