சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாவோயிஸ்ட்டான மணி வாசகம் கடந்த 28ஆம் தேதி கேரள வனப்பகுதியில் கேரள காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அவரது உடல் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் அரசு பொதுமருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மணி வாசகத்தின் மனைவி, தங்கை ஆகியோர் தற்போது சிறையில் உள்ளதால் அவரின் உடலை அடையாளம் காட்ட அவரது மனைவிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. இருவருக்கும் பரோல் கிடைத்தால் மனிவாசகத்தின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதனிடையே அரசு மருத்துவமனையில் மனிவாசகத்தின் உடல் வைக்கப்பட்டுள்ளதால் அவரின் ஆதரவாளர்கள் கூட வாய்ப்புள்ளதால் வளாகம் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மணி வாசகத்தின் உடல் அவரது சொந்த ஊரான காடையாம்பட்டி ராமமூர்த்தி நகரில் அடக்கம் செய்யப்பட்டால், ஆண்டுதோறும் நினைவஞ்சலி என்ற பெயரில் ஊர் மக்களின் அமைதியை பாதிக்கும். அதனால் இந்த ஊரில் அடக்கம் செய்யக் கூடாது என அப்பகுதி மக்கள் ஏற்கனவே சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...சரவணா ஸ்டோர் மேனேஜரிடம் கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய ஒன்பது பேர்!