ETV Bharat / state

குட்டையில் யூரியா உரத்தை கலந்து யானையைக் கொல்ல முயற்சி - யூரியா உரத்தை கலந்து யானையைக் கொல்ல முயற்சி

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே யூரியா உரத்தை வனக்குட்டையில் கலந்து யானையைக் கொல்ல முயற்சித்தவர் கைதுசெய்யப்பட்டார்.

யானையை கொலை செய்ய முயன்றவர் கைது!
யானையை கொலை செய்ய முயன்றவர் கைது!
author img

By

Published : Jun 24, 2020, 7:44 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி காப்புக்காட்டில் வனத் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்மரக்கட்டை என்ற இடத்தில் வனக்குட்டையில் ஏதோ ஒரு பொருளை கலப்பது தெரியவந்தது.

காவல் துறையினர் அந்தக் கும்பலைச் சுற்றிவளைக்க முயன்றபோது ஒருவர் மட்டுமே பிடிபட்டார் மற்றொருவர் தப்பியோடிவிட்டார். பின்பு விசாரணையில் சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த வெள்ளையன், தண்ணீர் குடிக்கவரும் யானையை சகாடிக்கவே யூரியா உரத்தை வனக்குட்டையில் கலந்ததாகத் தெரியவந்துள்ளது.

இந்த யூரியாவைப் பயன்படுத்தி யானை மட்டும் அல்லாமல் மான்களையும் கொலைசெய்ய முயற்சித்ததாகவும் குற்றவாளி ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பாக வெள்ளையனைக் கைதுசெய்த வனத் துறையினர் அவரிடமிருந்து சுருக்கு கம்பி, அரிவாள் யூரியா போன்றவற்றைப் பறிமுதல்செய்தனர் அதனைத் தொடர்ந்து சத்தி நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க: குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.