ETV Bharat / state

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதலர்கள்: ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் - சாதி மறுப்பு திருமணம்

சேலம்: சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட அதிமுக பிரமுகரின் மகள் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கணவருடன் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி

author img

By

Published : Oct 27, 2020, 6:48 PM IST

மதுரை விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் மகன் அரவிந்த் (27 ). இவர், மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக பிரமுகர் பாரி மகள் அபிநயா (27). பொறியியல் பட்டம் பெற்ற இவர் வேலை தேடி வந்துள்ளார்.

இந்நிலையில், அபிநயாவும் அரவிந்தும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் அபிநயா வீட்டாருக்கு தெரிய, இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனையடுத்து அபிநயாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்துள்ளது.

இதையறிந்த காதலர்கள் இருவரும், நேற்று (அக்டோபர் 26) காலை வீட்டை விட்டு வெளியேறி கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள கலப்புத் திருமணம் புரிந்தவர் நல சங்க செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையில், காதலர்கள் கோயம்புத்தூரில் இருப்பதை அறிந்த பாரி, கோயம்புத்தூர் வந்தார். அதையறிந்த அபிநயா, கோயம்புத்தூரில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் அரவிந்துடன் சேலத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து, தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அபிநயாவும் அரவிந்தும் சேலம் லைன் மேடு பகுதியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.