சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமையில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள், ஏழ்மை ஒழிப்பிற்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி சக்திவேல் கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்.
அப்போது, அறநெறிகளின் அடிப்படையில் பின்பற்றப்படும் உரிமைகள் காலம்தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கங்களுக்கும், உரிமைகளுக்கும் சட்டப் பின்னணி கிடையாது. இவை சட்டத்தால் காக்கப்படுபவை அல்ல. குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை அனைத்து சமுதாயமும் ஏற்றுக் கொள்கிறது.
எனவே மனித உரிமைகளை மதித்து அனைத்து தரப்பினரும் சமூகத்தில் அமைதி காத்து வாழ வழிவகுக்க வேண்டும் என்றார். முகாமில் எடப்பாடி சார்பு நீதிமன்ற வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான வன்முறை அடிப்படை உரிமைகளின் தோல்வி - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்