ETV Bharat / state

நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் ஏரி சீரமைப்பு...

சேலம்: பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரியின் புனரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் சதீஷ் தொடங்கிவைத்தார்.

ஏரி சீரமைப்பு
author img

By

Published : Aug 10, 2019, 4:38 PM IST

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நீர் ஆதாரம் காத்தல், மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய நீர் ஆதாரங்கள் ஏரிகளை புதுப்பித்தல், நீர் நிலை மேம்பாடு, பயன்பாடு ஆழ்துளை கிணறு மீள்நிரப்புதல், தீவிர மரம் வளர்ப்பு ஆகியவற்றின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.

நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் ஏரி சீரமைப்பு

இந்நிலையில், பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள 20. 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட வருவாய்த் துறைக்கு சொந்தமான போடிநாயக்கன்பட்டி ஏரியின் கரைகளை பலப்படுத்தல், கரையோர பகுதிகளில் உள்ள முட்புதர்கள், ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகள் இன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், பேரிடர் சங்க நிர்வாகிகள், தன்னார்வ அமைப்புகள், சுகாதார அலுவலர் எஸ்.மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Intro:நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட போடிநாயக்கன்பட்டி ஏரியின் புனரமைப்பு பணி மத்திய தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர் முனைவர் வெ. திருப்புகழ் அவர்கள் துவக்கி வைத்தார்.

Body:சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரியின் புனரமைப்பு பணிகளை மத்திய தேசிய பேரிடர்மேலாண்மை ஆணையத்தின் கொள்கை மற்றும் திட்ட இணை செயலாளர் முனைவர் வெ. திருப்புகழ் அவர்கள் மட்டும் மாநகராட்சி ஆணையாளர் சதீஸ் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நீர் ஆதாரம் காத்தல் மற்றும் மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய நீர் ஆதாரங்கள் ஏரிகளை புதுப்பித்தல், நீர் நிலை மேம்பாடு, மற்றும் பயன்பாடு ஆழ்துளை கிணறு மீள்நிரப்புதல், தீவிர மரம் வளர்ப்பு ஆகியவற்றின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பாரம்பரிய நீர் ஆதாரங்கள் ஏரிகளை புதுப்பிக்கும் பணிகள் பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள 20. 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட வருவாய்த்துறை சொந்தமான போடிநாயக்கன்பட்டி ஏரியின் கரைகளை பலப்படுத்தல், கரையோர பகுதிகளில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணிகள், ஏரியில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் ஏரி அணை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் மாநகர அசோகன், மாநகர நல அலுவலர் பார்த்திபன், மற்றும் பேரிடர் சங்க நிர்வாகிகள், தன்னார்வ அமைப்புகள், சுகாதார அலுவலர் எஸ்.மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.