சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை அருகில் உள்ளது குமரகிரி ஏரி. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் இரண்டாவது முறையாக நிரம்பியது.
இந்த ஏரிக்கு கழுகுமலை, கந்தகிரி, உடையாப்பட்டி, நாம மலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மழை நீர் வருகிறது. ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் கிச்சிப்பாளையம், நாராயண நகர், பாவடி தெரு வழியே சென்று திருமணிமுத்தாற்றில் கலக்கிறது.
கடந்த வாரம் பெய்த மழையால் அம்மாபேட்டை பகுதியில் உள்ள சில சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஏரியில் சாயப்பட்டறை நீரை திறந்து விட்டதால் தற்போது ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது. ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் நுரையுடன் வெளியேறுகிறது.
ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் சூழ்ந்து தண்ணீர் நாளுக்கு நாள் பச்சை நிறமாக மாறி வருகிறது. இதனையடுத்து இந்த ஏரியில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனே அகற்றவேண்டும் என்றும், சாயப்பட்டறை நீர் ஏரியில் கலப்பதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் அம்மாபேட்டை சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு - தொடரும் சீரமைப்புப் பணி!