ETV Bharat / state

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.. சேலத்தில் பலர் கைது - Rajan is an RSS personality from Ponnammapet

சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாகவும் சிலரை கைது செய்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.. சேலத்தில் பரபரப்பு!

author img

By

Published : Sep 25, 2022, 7:15 PM IST

சேலம் அடுத்த பொன்னம்மாபேட்டை பகுதியைச்சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று(செப்.25) அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்றி, வீட்டின் முன்பு சில நபர்கள் வீசியுள்ளனர். இந்த தீயினால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக ராஜன் அளித்தப்புகாரின்பேரில் ஏழு பேரை அழைத்துச்சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில் காதர்உசேன், சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த இருவர் மீதும் தீ வைத்து பாதிப்பு ஏற்படுத்த முயற்சி செய்தல், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரோனா பரிசோதனைக்குப் செய்து நீதிமன்ற காவலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது, 'சேலம் மாநகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சந்தேகத்திற்குரிய நபர் இருவரை பிடித்து விசாரணை செய்ததில் சையது அலி, காதர் உசேன் ஆகிய இருவரும் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் முழுவதும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.. சேலத்தில் பலர் கைது

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஷெரிப்பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் முகமது ரஃபி, மற்றும் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், முகமதுஆரிஸ், காஜா உசேன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பெட்ரோல் வெடிகுண்டு:தங்களுக்கு தாங்களே விளம்பரத்திற்காக வீசியிருப்பின் கடும் நடவடிக்கை - தென் மண்டல ஐஜி எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.