ETV Bharat / state

'ஆர்.என்.ரவி ஆளுநராக செயல்படாமல் ஆர்.எஸ்.எஸ்.காரராக உள்ளார்' - கி.வீரமணி

'தமிழ்நாடு ஆளுநர் ஆளுநராக நடப்பதில்லை; அவர் ஆர்எஸ்எஸ்-காரராக நடந்து கொள்கிறார்' என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 9, 2023, 11:00 PM IST

Updated : Jan 10, 2023, 4:34 PM IST

'ஆர்.என்.ரவி ஆளுநராக செயல்படாமல் ஆர்.எஸ்.எஸ்.காரராக உள்ளார்' - கி.வீரமணி

சேலத்தில் இன்று (ஜன.9) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழ்நாடு ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அரசியல் அமைப்பு சட்டத்தில் அவருக்கு எந்த அதிகாரிகளும் வழங்கப்படவில்லை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் தனித்து உரையாற்றியிருப்பது மற்றும் பாதியிலேயே வெளியேறியது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் சட்டசபையில் ஆளுநர் எப்படி அநாகரிகமாக நடந்து கொண்டது இதுவே முதல்முறை. இது கண்ணியமற்ற செயல்.

ஆளுநர் உரை என்பது ஆளுநர் தயாரிப்பது அல்ல, அரசு மற்றும் அரசின் அமைச்சர்கள் மூலமாக அரசு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதை வாசிக்கும் உரிமை மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. இதேபோல் ஒன்றிய அரசிலும் பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு முன்பு அரசின் திட்டங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் உள்ளது. அதை குடியரசுத் தலைவர் வாசிப்பாரே தவிர குறுக்கீடு செய்ய முடியாது.

அதேபோல் தான் மாநில அரசுகளிலும் ஆளுநருக்கு வாசிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. அதை இவர் கொச்சைப்படுத்தி உள்ளார். ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை. அது அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும் அது மரபும் கூட. அந்த மரபை தமிழ்நாடு ஆளுநர் ரவி மீறி உள்ளார்.

'திராவிட மாடல்’ அரசு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை அவர் புறம் தள்ளி பேசுவது நாகரிகமானது அல்ல. மாற்றுக் கருத்து இருந்தால் தனிப்பட்ட முறையில் அரசிடம் தெரிவிக்கலாம் அல்லது பேரவை தலைவரிடம் தெரிவிக்கலாமே தவிர இப்படி பேரவையை விட்டு வெளியேறுவது சரியல்ல. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் தமிழ்நாடு ஆளுநரின் இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

சட்டமன்றத்தில் இது போல் நடந்து கொண்ட ஆளுநர் இதுவரை இல்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் ஆளுநராக நடப்பதில்லை. அவர் ஆர்எஸ்எஸ்காரராக நடந்து கொள்கிறார். தமிழகத்தில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசின் தூதுவராக ஆர்எஸ்எஸ்-ன் கொள்கைகளை ஏற்று தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார்.

அவர் ஒரு அரசு ஊழியர். ஆனால் அரசுக்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் பேசி வருவது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு உடனடியாக அவரை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் உடனடியாக தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு உடனடியாக அவரை திரும்ப பெற வேண்டும். மக்கள் நலத் திட்டத்திற்கு எதிராக செயல்படும் ஒருவர் தமிழகத்திற்கு எதிராக செயல்படும் ஒருவர் தமிழகத்தில் ஆளுநராக இருக்க முடியாது.

குறிப்பாக பேரறிவாளன் விடுதலை, உள்ளிட்ட பல கோப்புகளை ஆளுநர் பரிசீலிக்கவும் இல்லை. திருப்பி அனுப்பவும் இல்லை. இதிலிருந்து மக்களின் நல்ல திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் எதிராகவே செயல்படுபவர் ஆளுநர் என்.ஆர். ரவி.; எனவே உடனடியாக மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும், அவர் ஆளுநராக இருக்க ஒரு நொடி கூட தகுதி இல்லாதவர்’ என குற்றம்சாட்டினார்.

மேலும், ‘ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் இல்லாத மாநில அரசுகளை ஆளுநர்களை கொண்டு அடக்க நினைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பிரச்னைகளை ஆளுநர்கள் மூலமாக நெருக்கடி கொடுத்து பிளவுபடுத்தும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திராவிட அரசின் கொள்கைகளால் மக்கள் நலமுடன் உள்ளனர். ஆனால் இது போன்று ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் இன்று சட்டசபையையே அவமானப்படுத்தி சென்றுள்ளதை ஏற்க முடியாது. உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'திராவிட மாடல்' வார்த்தை தவிர்ப்பு.. சட்டப்பேரவையில் பாதியில் வெளியேறிய ஆளுநர்!

Last Updated : Jan 10, 2023, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.