ETV Bharat / state

பிரபல லாட்டரி வியாபாரி வீட்டில் வருமான வரிச் சோதனை: கட்டுக்கட்டாக பணம் சிக்கியது!

சேலம்: லாட்டரி சீட்டு வியாபாரியின் வீட்டில் கணக்கில் வராத சுமார் 30 லட்சம் ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வருமான வரிச் சோதனை
author img

By

Published : Mar 17, 2019, 3:03 PM IST

சேலம் மாவட்டம் சங்கர் நகரைச் சேர்ந்தவர் லாட்டரி சீட்டு வியாபாரி கண்ணன். இவர்தடைசெய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அஸ்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையிலான காவலர்கள், கண்ணன் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது லாட்டரி சீட்டுடன் கத்தை கத்தையாக பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத சுமார் 30 லட்சம் ரூபாய், 200 சவரன் தங்க நகைகள் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:சேலத்தில் பிரபல லாட்டரி வியாபாரி கண்ணன் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டதில் கட்டுகட்டாக பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் சிக்கியது.

Body:சேலம் மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் வீட்டில் பதுக்கி வைத்து ரகசியமாக விற்கப்படுவதாக அந்த ரகசிய தகவலின் பேரில் சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பதை தடுக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்து சேலம் மாநகரம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அண்மையில் அன்னதானப்பட்டி பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 17 பேர் சிக்கினர். இதன் தொடர்ச்சியாக சேலம் சங்கர் நகர் பகுதியில் பிரபல முத்து லாட்டரி விற்பனை வியாபாரி கண்ணன் வீட்டில் மாநகர காவல் உதவி ஆணையர் செந்தில் குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி கள் மற்றும் கட்டுக்கட்டாக 30 லட்சம் பணத்தையும் 200 பவுன் தங்க நகையும் கைப்பற்றினர். மேலும் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகை களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் வருமானத் துறை உதவி இயக்குனர் சிவ செல்வி தலைமையில் வந்த வருமானத் துறை அதிகாரிகள் கண்ணன் வீட்டில் 30 லட்சம் பணம் இருந்தது குறித்தும் 200 பவுன் தங்க நகைகளை கைப்பற்றி, வருமான வரி முறையாக கட்டி உள்ளதா என்பது குறித்தும் கண்ணனின் வருவாய் குறித்தும் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் சேலத்தில் லாட்டரி வியாபாரி வீட்டில் 30 லட்சம் பணம் மற்றும் 200 பவுன் தங்க நகைகள் சிக்கியது அதிகாரிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

Conclusion:மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இந்த முப்பது லட்ச ரூபாய் பதுக்கி வைக்கப் பட்டதா அல்லது லாட்டரி விற்பனையில் கிடைத்த பணம் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் கண்ணன் வீட்டில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.