சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப். 29) நடைபெற்றது. இதற்குத் தலைமை வகித்த தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தமிழ்நாட்டில்தான் சிறுபான்மை இன மக்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. அதிகமான சலுகைகளையும் வழங்கி முதலிடம் பெற்று உள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய அரசு திட்டங்கள் சிறுபான்மையின மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் சென்று சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டுவருகிறது. அதனைச் சரிசெய்ய மாவட்ட நிர்வாகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறுபான்மையின மக்களின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி போதவில்லை. கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கைவிடுத்துள்ளது. பயனாளிகளுக்கு 10 லட்சத்து 40 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க...பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கு வலியுறுத்தல்...!