ETV Bharat / state

ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் - சேலத்தில் பொதுமக்கள் அவதி! - Congestion of railway works make traffic issue

சேலம்: இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியால், முள்ளுவாடிகேட் பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர்.

ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல்
author img

By

Published : Nov 12, 2019, 5:30 PM IST

சேலம் மாவட்டம் டவுன் பகுதியில் முள்ளுவாடிகேட் ரயில்வே பாதையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் பாலம் கட்டும் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. இதனால் முள்ளுவாடி கேட் பகுதியில் ஒரு வழிப்பாதையாக இருந்த மற்றொரு சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக ரயில் செல்லும் நேரங்களான காலை 8.30, நண்பகல் 1.30, இரவு ஒன்பது மணிக்கு எல்லாம் ரயில்வே கேட் அடைக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அதிகமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே, முள்ளுவாடி கேட் பகுதியை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்," மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்களை அண்ணாப் பூங்கா, சுந்தர் லாட்ஜ் வழியாக செல்ல மாற்றியமைத்தும், சுந்தர் லாட்ஜ் பகுதியிலிருந்து முள்ளுவாடி கேட் வழியே வாகனங்கள் டவுனுக்கு வரவும் வழிவகை செய்ய வேண்டும்.

ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல்

இதனால், முள்ளுவாடி கேட் ரயில் பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றினால், போக்குவரத்து நெரிசல் முற்றிலும் இல்லாமல் ஆகிவிடும். எனவே, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களை கருத்தில் கொண்டு, சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில்குமார், சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இருவரும் இணைந்து முள்ளுவாடி கேட் பகுதியில் ஆய்வு செய்து, பாலப் பணிகள் முழுவதுமாக முடிவடையும் வரை, முள்ளுவாடி ரயில்வே பாதை ஒரு வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - மதுரை மக்கள் வேதனை!

Intro:சேலம் முள்ளுவாடி கேட் ரயில்வே பாதையில் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் அவதி.

ஒரு வழிப்பாதையாக மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்.

Body:சேலம் டவுன் பகுதியில் உள்ளது முள்ளுவாடிகேட் ரயில்வே பாதை' இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு இரண்டு வருடத்திற்கு மேலாகியும் இன்னும் பல பணிகளில் வேலை முழுவதும் முடியவில்லை. இதனால் முழு வாடி கேட் பகுதியில் உள்ள மற்றொரு பாதையில் வாகனங்கள் சென்று வருகிறது.

முதலில் இந்தப் பாதை ஒரு வழி பாதையாக இருந்தது. தற்போது பாலம் கட்டப்பட்டு வருவதால் வாகனங்கள் இந்த வழியே சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி வருகிறது. இதனால் எப்போதும் பார்த்தாலும் முள்ளுவாடி கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஆக காணப்படுகிறது.

காலை எட்டு முப்பது மணி, பகல் 1.30 மணி, இரவு ஒன்பது முப்பது மணி நேரத்தில் ரயில்கள் இந்த வழியே சென்று வருவதால் ரயில்வே கேட் அமைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மேலும் அதிகமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் முள்ளுவாடி கேட் பகுதியை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் மேம்பாலம் வழியே வாகனங்கள் சென்று அண்ணா பூங்கா, சுந்தர்ராஜ் வலியே வாகனங்கள் செல்லவும், சுந்தர லாட்ஜ் பகுதியிலிருந்து முள் வாடி கேட் வழியே வாகனங்கள் டவுனுக்கு வரவும் வழிவகை செய்ய வேண்டும். முள்ளுவாடி கேட் ரயில் பாதை ஒரு வழி பாதையாக மாற்றினால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் இல்லாமல் ஆகிவிடும். தற்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி மற்றும் கல்லூரிக் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில்குமார் மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆகியோர் இணைந்து முள்ளுவாடி கேட் பகுதியில் ஆய்வு செய்து பாலம் பணிகள் முழுவதும் முடிவடையும் வரை முழு வாடி ரயில்வே பாதை ஒரு வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

பேட்டி: தெய்வலிங்கம், பொதுமக்கள்

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.