ஃபானி புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தின் அஸ்தம்பட்டி, வின்சென்ட், கோரிமேடு, அம்மாபேட்டை, ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் , கடந்த ஒரு வாரமாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.