சேலம் மாவட்டம், எடப்பாடி, கொங்கணாபுரம், கன்னந்தேரி, பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, கல்வடங்கம் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில், வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. நேற்று மாலை, அப்பகுதிகளில், சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், 2,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தன.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆத்தூரில் 25.4 மி.மீ. அளவு மழையும், சேலத்தில் 22.5 மி.மீ. அளவும் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று மாலையும் சேலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது.