ETV Bharat / state

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு - எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. குற்றச்சாட்டு

author img

By

Published : Mar 10, 2020, 7:12 PM IST

Updated : Mar 10, 2020, 11:46 PM IST

சேலம்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி,
எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி,

சேலம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி, பேசுகையில், "மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாவட்ட ஆட்சியர் செயல்பட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு மேம்பாட்டு பணிகளில் முறைகேடுகள் நடைபெறுகின்றன.

மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டுவரும் மேம்பாட்டு பணிகள் தரக்குறைவாக இருக்கிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிய ஆதாரத்துடன் மத்திய அரசின் கவனத்திற்கு விரைவில் இந்த முறைகேடுகள் தெரிவிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ‘காங்கிரஸில் இணைய யார் காரணம்?’ - ஜோதிமணி எம்.பி.

Last Updated : Mar 10, 2020, 11:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.