ETV Bharat / state

'யூகங்கள் பேச வேண்டாம், ரஜினி கட்சி பெயரை அறிவிக்கட்டும்' - பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா

சேலம்: நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இதுவரை கட்சி பெயரை அறிவிக்கவில்லை. முதலில் அவர் கட்சி பெயரை அறிவிக்கட்டும், யூகங்கள் அடிப்படையில் பேச வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறினார்.

tamilnadu, salem, bjp, hraja,  bjp senior president h raja bite  அடாவடித்தனமாக தற்போது இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர்  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா  எச் ராஜா செய்தியாளர் சந்திப்பு
அடாவடித்தனமாக தற்போது இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர் - எச் ராஜா
author img

By

Published : Mar 12, 2020, 10:31 AM IST

சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறுகையில், "தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக முருகன் பொறுப்பேற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. துடிப்புமிக்க இளைஞர். மிகவும் சிறப்பாகச் செயல்படுவார்" என்றார்.

மேலும் அவர், "புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் விவாதிக்க தயாராக இருந்தால் நான் பதிலளிக்கிறேன். வேண்டுமென்றே அடாவடித்தனத்தை வெளிப்படுத்தி தேச விரோதப்போக்கில் ஒரு சில கட்சிகள் ஒன்றிணைந்து போராடும் போராட்டம் இது. உலகத்திலேயே வெளிநாட்டில் வாழும் நபர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தும் ஒரு தரங்கெட்ட கட்சியாகவே உள்ளது திமுக. கீழ்த்தரமாகவும் கேவலமாகவும் தேசவிரோத சிந்தனைகள் கொண்ட சக்திகள் செயல்பட்டுவருகின்றன.

எச். ராஜா பேட்டி

அந்த வழியில் வந்த காங்கிரஸ் தற்போது அழிந்துவிட்டது. திமுக கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது. ஆகவே இந்தப் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் அனைவரையும் பாதிக்கும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. யாருக்கு பாதிப்பு என்று ஒரு நபராவது சொல்ல முடியுமா? புதிய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவில் எத்தனை பிரிவுகள் உள்ளது என்று யாருக்கு தெரியும்? இதனை எல்லாம் தெரிந்துகொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்தினால் நான் அவருக்கு விளக்கம் அளிக்கிறேன்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டம் யூகங்களின் அடிப்படையில் பேசவேண்டாம்- எச். ராஜா

மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இதுவரை கட்சி பெயரை அறிவிக்கவில்லை. முதலில் அவர் கட்சி பெயரை அறிவிக்கட்டும், யூகங்கள் அடிப்படையில் பேச வேண்டாம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘பிறருக்காகப் போராடும் மருத்துவர்களால்தான் உலகம் சுவாசிக்கிறது’ - கமல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.