தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா பொருள்கள் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் ஆங்காங்கே குட்கா, பான் மசாலா பொருள்களை விற்பனை செய்துவருபவர்கள் பலர் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பெருமளவில் குட்கா மூட்டைகள் கடத்திவரப்படுவதாகச் சேலம் மாநகரக் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து காவல் துறையினர் கொண்டலாம்பட்டி புறவழிச்சாலை சோதனைச்சாவடியில் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூருவிலிருந்து மதுரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முட்டைகோஸ் ஏற்றிச்சென்ற லாரி ஒன்றில் குட்கா மூட்டைகள் கடத்திவரப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனே அவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் பறிமுதல்செய்யப்பட்ட 10 மூட்டை குட்கா பொருள்களின் மதிப்பு ரூ.10 லட்சமாகும்.
இதையும் படிங்க: சென்னையில் போதைப் பொருள் கடத்தியவர் கைது - 20 மூட்டை பறிமுதல்