ETV Bharat / state

சட்டவிரோத டாஸ்மாக் மதுபான விற்பனை - தடைகோரி தீர்மானம்!

சேலம்: வாழப்பாடி அருகே திருமானூர் ஊராட்சி பகுதியில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபான விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கள்ளச்சாராயம் விற்க அனுமதி இல்லை
author img

By

Published : Aug 16, 2019, 5:05 AM IST

Updated : Aug 16, 2019, 6:54 AM IST

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள திருமானூர் ஊராட்சி பகுதியில் சுதந்திர தின விழாவையொட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராம வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர்.

இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி அலுவலரிடம் கிராமத்தின் முக்கிய பிரச்னைகளான சாலை, குடிநீர், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து மனு அளித்தனர்.

கிராம சபை கூட்டம்

மேலும், இதில் திருமானூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக நடக்கும் டாஸ்மாக் மதுபான விற்பனையை தடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Intro:சட்டவிரோதமாக கிராமப் பகுதிகளில் நடைபெறும் கள்ள மது விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சேலம் மாவட்ட கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Body:சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள திருமானூர் ஊராட்சி பகுதியில் சுதந்திர தின விழாவையொட்டி இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராம சபை கூட்டத்தில் திருமானூர் கிராம மக்கள் கலந்துகொண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராம வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர்.

கிராம சபை கூட்டம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த திருமானூர் வளர்ச்சி குழுவின் பிரதிநிதி செல்வராஜன் கூறுகையில் ," திருமானூர் கிராமத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

சுதந்திர தின விழாவையொட்டி இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி அலுவலரிடம் கிராமத்தின் முக்கிய பிரச்சனைகளான குடிநீர் தேவை குறித்தும் சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்தும் புகார் தெரிவித்தோம்.

மேலும் திருமானூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதியிலும் திருமானூரிலும் 24 நேரமும் சந்து கடை எனப்படும் கள்ளச்சந்தை மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்க வலியுறுத்தி தீர்மானம் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றினோம்" என்று தெரிவித்தனர்.

Conclusion:சென்ற ஆண்டு சுதந்திர தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அதிகாரிகள் ஒராண்டு ஆகியும் நிறைவேற்ற வில்லை, என்று ஊர் மக்கள் இன்று அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதனால் திருமானூர் கிராமசபை கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Last Updated : Aug 16, 2019, 6:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.