ETV Bharat / state

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தணிக்கை குழு அதிரடி சோதனை!

Salem Periyar University Controversy: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிமுறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், உள்ளாட்சி தணிக்கை குழு துணை இயக்குநர் நீலாவதி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் தணிக்கை குழு ஆய்வு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 3:36 PM IST

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் (PUTER) என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கி, பல்கலைக்கழக நிதியில் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் உள்பட மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர்.

முன்னதாக, தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள், மத்திய அரசு நிதியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாகக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். குறிப்பாக, கணினி மென்பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், உள்ளாட்சி தணிக்கை குழு சிறப்பு துணை இயக்குநர் நீலாவதி தலைமையில், நான்கு பேர் கொண்ட குழுவினர் நேற்று (ஜன.18) பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அப்போது, பல்கலைக்கழகத்திற்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கிய நிதி எவ்வாறு கையாளப்பட்டு உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.

இதையும் படிங்க: சென்னையில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை மற்றும் ஐடி ரெய்டு... காரணம் என்ன?

பல்கலைக்கழகத்திற்குத் தேவையான கணினி உள்ளிட்ட தளவாடப் பொருட்கள், உபகரணங்கள் முறையாக வாங்கப்பட்டதா? அதில் முறைகேடு நடந்துள்ளதா? தரமான நிறுவனத்தில் வாங்கப்பட்டதா ஆகியவை குறித்தும் ஆய்வு நடத்தினர். அதேபோன்று, பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்கப்பட்டுள்ளதா? அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதா? கட்டடங்கள் கட்டப்பட்டதில் ஏதாவது முறைகேடு நடந்ததா உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் ஆய்வு நடத்தினர்.

நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு, நேற்று இரவு 9 மணி அளவில் நிறைவடைந்தது. அது குறித்து ஆய்வுக் குழுவினர் கூறுகையில், "அரசு நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் பொறுப்பு ஏற்றதிலிருந்து, இதுவரை ஏதாவது முறைகேடு நடந்ததா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்' என்று கூறினர்.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும், பதிவாளர் தங்கவேல் ஏழு ஆண்டுகளாகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்திய போது, பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: 7 வருடங்களுக்குப் பிறகு சசிகலா கோடநாடு வருகை.. ஜெயலலிதாவிற்கு சிலை, மணிமண்டபம் எழுப்ப பூமி பூஜை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.