கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்கியுள்ள நிலையில், நாள்தோறும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்த முருங்கபட்டி அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், முக கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அந்தப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று முகக் கவசம் வழங்கினர்.
மேலும், அவ்வழியே செல்லும் பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: கரோனா பரவல்: ரயில்வே ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர அறிவுறுத்தல்