ETV Bharat / state

அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மருத்துவமனையில் ஆலோசனை கூட்டம்!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகள் குறித்து இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று (ஆக்.25) ஆலோசனை நடத்தினார்.

ஆட்சியர் ராமன்
ஆட்சியர் ராமன்
author img

By

Published : Aug 25, 2020, 6:50 PM IST

இக்கூட்டத்தில் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “கடந்த சில தினங்களாக இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு மருத்துவர்களுடன் இணைந்து இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் பணியாற்றிட முன்வரவேண்டும்.

இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்திட வேண்டும். மேலும், மாவட்டத்தில் கரோனா தொற்றை குறைத்திடும் வகையில் தங்களது ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

தொடர்ந்து காய்ச்சல் முகாம், சளி பரிசோதனை முகாம் மற்றும் மருத்துவர்களுக்கான கோவிட் நல மையம் ஆகியவற்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நபர்கள் தங்கியிருந்த பகுதிகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைவருக்கும் கட்டாயம் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதனைதொடர்ந்து, அப்பகுதி அனைத்தையும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் உளிட்ட அனைத்து நோய் தடுப்பு பாதுகாப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் வழிகாட்டுதல் மையம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ததோடு, ரூ.3.09 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் கண்மருத்துவ பிரிவு கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ஆர்.பாலாஜிநாதன், இணை இயக்குநர் நலப்பணிகள் மரு. மலர்விழி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு. நிர்மல்சன் உட்பட இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் - அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.