சேலம் லைன்மேடு அருகே உள்ள வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர், ஆயிஷா. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தாய்-மகள் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட மந்திரவாதி வேடத்தில் வந்த திருடன், உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது.
இதனைக் கழித்துவிடச் சிறப்புப் பூஜைகள் செய்ய வேண்டும் எனக்கூறி, தாய் மகளிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி அந்த போலி மந்திரவாதியைப் பூஜை செய்ய வீட்டிற்குள் அனுமதித்து உள்ளனர்.
இதையடுத்து, பூஜை செய்து கொண்டு இருந்தபோது மகள் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகைகளைக் கழற்றி மந்திரவாதி வைத்திருந்த சொம்பில் போடும்படி தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தாய், மகள் இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் அன்னதானப்பட்டி காவல் துறையினர், இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நகையைக் கொள்ளையடித்துச் சென்ற மந்திரவாதி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டுக்குள் நுழைந்து தோஷம் கழிப்பதாகக் கூறி, போலி மந்திரவாதி நகைத்திருட்டில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்ட்ராகிராமில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது