ETV Bharat / state

வரும் 25ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு!

சேலம் : சுகாதாரத் துறையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகின்ற 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

gh doctors press meet
author img

By

Published : Oct 17, 2019, 2:24 PM IST

தமிழ்நாடு சுகாதார துறையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் மாதம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 6 வார காலத்திற்குள் மருத்துவர்களின் கோரிக்கைள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். ஆனால், மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டுக்குழுவினர், 'தமிழகத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பணிபுரிந்து வருவதாகவும், மருத்துவர்களுக்கு தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 354 அரசாணையை அறிவித்து, அதன்படி ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் அறிவித்தாகவும்; ஆனால், அந்த அறிவிப்பின்படி ஊதிய உயர்வு முழுமையாக அமல்படுத்தாமல் உள்ளதால், அதனை முழுமையாக அமல்படுத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்த அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டுக்குழுவினர்

அரசு மருத்துவர்களின் பட்டமேற்படிப்பிற்கு முழுமையாக 50 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 5 அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டுக்குழுவைச் சார்ந்த, 16 ஆயிரம் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தினால் அவரச சிகிச்சை, காய்ச்சல் பிரிவு அனைத்து மருத்துவமனைகளில் இயங்கும் எனவும் மற்ற பிரிவுகளில் மருத்துவர்கள் பணிக்கு செல்ல மாட்டார்கள் எனவும் அறிவித்துள்ளனர். வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா - பாஜகவினர் பாதயாத்திரை!

Intro:அரசு மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.Body:
தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழக அரசு சுகாதார துறையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டபோது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 6 வாரகாலத்திற்குள் மருத்துவர்கள் கோரிக்கைள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்த வித நடவடிக்கைகள் எடுக்கவில்லை என கூறி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டுக்குழுவினர்
தமிழகத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பணிபுரிந்து வருவதாகவும், மருத்துவர்களுக்கு தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 354 அரசானையை அறிவித்து அதன்படி ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் அறிவித்தாகவும் ஆனால் அந்த அறிவிப்பின் படி ஊதிய உயர்வு முழுமையாக அமல்படுத்தாமல் உள்ளதால் அதனை முழுமையாக அமல்படுத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அரசு மருத்துவர்களின் பட்டமேற்படிப்பிற்கு முழுமையாக 50 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். மேலும் வேலை நிறுத்த போராட்டத்தில் 5 அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டுக்குழுவை சார்ந்த 16 ஆயிரம் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தெரிவித்தனர். தங்களது வேலை நிறுத்த போராட்டத்தினால் அவரச சிகிச்சை மற்றும் காய்ச்சல் பிரிவு அனைத்து மருத்துவமனைகளில் இயங்கும் எனவும் மற்ற பிரிவுகளில் மருத்துவர்கள் பணிக்கு செல்ல மாட்டார்கள் என அறிவித்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக தமிழ அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

பேட்டி - லட்சுமி நரசிம்மன் (அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டுக்குழு சேலம் )

visual send mojo Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.