ETV Bharat / state

'ஃப்ளோரசன்ட் ரேடியம்'  விநாயகர் சிலை - பொதுமக்கள் கண்டுகளிப்பு!

சேலம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செவ்வாய்பேட்டை அருகே 'ஃப்ளோரசன்ட் ரேடியம்' முறையில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

fluorescent-radium
author img

By

Published : Sep 2, 2019, 1:21 PM IST

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப விநாயகர் சிலையும் ஆண்டுதோறும் புதுமையான முறையில் அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படுகிறது.

இந்நிலையில் சேலம் செவ்வாய்பேட்டை அருகே ஃப்ளோரசன்ட் ரேடியம் என்ற தொழில்நுட்பம் மூலம் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலை பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃப்ளோரசன்ட் ரேடியம்' தொழில்நுட்பத்தில் விநாயகர் சதுர்த்தி

ஃப்ளோரசன்ட் ரேடியம் என்பது ஒருவகையான திரவம். இது பலவண்ணங்களில் கிடைக்கக்கூடியது. இந்த திரவத்தை ஏதாவது ஒரு பொருளின் மீது பூசிவிட்டு விளக்கு அணைக்கப்பட்டாலும் அத்திரவம் ஒளிர கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. இதில் வர்ண விளக்குகளுக்கேற்ப மிளிர கூடிய திரவமும் உண்டு.

எனவே இதனை கொண்டு புதுமையாக விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வண்ண வண்ண ஃப்ளோரசன்ட் ரேடியத்தால் அலங்கரிக்கபட்டுள்ளதால் வண்ணமயமாக காட்சியளிக்கிறது அந்த விநாயகர் சிலை. இதனை பொதுமக்கள் வியப்புடன் கண்டு, வழிபட்டு செல்கின்றனர்.

Intro:சேலத்தில் விநாயகருக்கு யானைமுகம் தோன்றிய புராண வரலாற்று நிகழ்வுகளை உணர்த்தும் தத்ரூப காட்சிகளை டிஜிட்டல் முறையில் வடிவமைத்து பக்தர் ஒருவர் அசத்தியுள்ளார்.

Body:விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு பகுதியிலும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப விநாயகரை பல்வேறு வடிவங்களில் வடிவமைத்து வழிபாடு செய்கின்றனர்.

சேலத்தில் உள்ள அசோசியேசன் சார்பில் விநாயகர் அவதார காட்சிகளை டிஜிட்டல் முறையில் ஒளி அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு விநாயகர் அமைக்கப்பட்டுள்ளது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விநாயகரின் தலைக்கு யானை தலை உருவம் எவ்வாறு வந்து சேர்ந்தது என்று விளக்கும் புராண காட்சிகள் 35 லட்ச ரூபாய்க்கு மதிப்பீட்டில் உயிரோட்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து டிஜிட்டல் விநாயகர் அரங்கை ஏற்பாடு செய்த சேகர் கூறுகையில்," விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் பக்தர்களுக்கு ஒரு சிறப்பு தரிசன காட்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

மூன்று நாட்களுக்கு இந்த டிஜிட்டல் ஒளி அமைப்பு முறையில் விநாயகரை பக்தர்கள் தரிசிக்கலாம்" என்றார்.

Conclusion:சேலம் செவ்வாய்பேட்டை வாசவி கல்யாண பவனம் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் விநாயகரை பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேரில் வந்து தரிசனம் செய்யலாம் என்றும் மேலும் சேகர் தெரிவித்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.