தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்காக சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி சேலம் வந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "1972 ஆண்டு முதல் அதிமுக வெற்றி தோல்விகளை சந்தித்துவருகிறது. தோல்வி என்பது எங்களுக்கு புதிதல்ல. அரசியலில் வெற்றி தோல்வி மாறி மாறி வருவது சகஜம். மீண்டும் அதிமுக வெற்றி பெறும்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்து மக்களுக்கு சேவையாற்றிய எங்களை தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையை நிரூபிக்கும் வகையில் இந்த தேர்தல் அமைந்தது.
புதியதாக அமைய உள்ள திமுக அரசின் நடவடிக்கைகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: விஜயகாந்திடம் வாழ்த்து பெற்ற உதயநிதி!