ETV Bharat / state

துப்பாக்கியைக் காட்டி விவசாயிகளை மிரட்டிய ஆத்தூர் வனச்சரகர் சஸ்பெண்ட்!

சேலம்: ஆத்தூர் அருகே துப்பாக்கியைக் காட்டி விவசாயிகளை மிரட்டிய விவாகரம் தொடர்பாக வனச்சரகர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டச் செய்திகள்  ஆத்தூர் செய்திகள்  ராமநாயக்கன் பாளையம்  துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனச்சரகர்  salem district news  salem ranger gun issue
துப்பாக்கி முனையில் விவசாயிகளை மிரட்டிய ஆத்தூர் வனச்சரகர் சஸ்பெண்ட்
author img

By

Published : Jul 30, 2020, 5:12 AM IST

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன் பாளையம் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலுள்ள விளைநிலங்களில் மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து விளைப்பொருள்களைச் சேதம் செய்து வந்துள்ளன. இதனைத் தடுக்க 2019ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன், பழனிவேல் உள்ளிட்டோர் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விவசாயிகளிடம் பள்ளம் தோண்டக் கூடாது என்று கூறி தடுத்துள்ளனர். இதில், விவசாயிகளும் வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வனத்துறையினரைச் சிறைப்பிடித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வனச்சரகர் அன்பழகன்

இதன்பின்பு வனச்சரகர் அன்பழகன் ஆத்தூர் ஊரகக் காவல் துறையினரிடம், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை 100 பேர் சேதப்படுத்தி அரசு அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தனர் எனப் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் 100 பேர் மீது கடந்த மே 5ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், குணசேகரன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவதைத் தடுக்க பள்ளம் தோண்ட வனச்சரகர் அன்பழகனிடம் அப்பகுதி விவசாயிகள் அனுமதி கேட்டுள்ளனர். அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் அன்பழகன் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அவர், கேட்ட பணத்தில் 3 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு பள்ளம் தோண்டும் பணியை அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டுவந்ததாகவும், மீத லஞ்சப்பணம் தராததால் விவசாயிகளைத் தூப்பாக்கியைக் காட்டி சுட்டுவிடுவேன் என்று அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், சேலம் மாவட்ட வன அலுவலரிடம் கடந்த 26ஆம் தேதி புகார் அளித்தனர். புகாரின் பேரில் வன அலுவலர் முருகன் விவசாயிகளிடம் விசாரணை நடத்தி, வனச்சரகர் அன்பழகனைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சேலத்தில் இ.ஐ.ஏ. சட்டத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.