ETV Bharat / state

பிரியாணியில் புழு எதிரொலியாக பிரபல உணவகத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் சோதனை

தாம்பரத்தில் உள்ள சேலம் ஆர்.ஆர். உணவகத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் திடீர் சோதனை மேற்கொண்டார்.

சேலம் ஆர்.ஆர் உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீர் சோதனை

author img

By

Published : Aug 14, 2022, 6:24 PM IST

சென்னை: கிழக்குதாம்பரம் பகுதியில் இருக்கக்கூடிய சேலம் ஆர்.ஆர். பிரியாணி உணவகத்தில் நேற்று இளைஞர்கள் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அந்த மட்டன் பிரியாணியில் புழு இருந்ததைக் கண்ட இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து உணவக மேலாளர் இடம் கூறுகையில், அந்தப் புழுவை தூக்கிப்போட்டுவிட்டு பிரியாணியை சாப்பிடுங்கள் என அலட்சியமாக கூறியதால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் செங்கல்பட்டு மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் அனுராதாவிடம் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில் ஆறுமுகம் இன்று சேலம் ஆர்.ஆர். உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டார். மேலும் உணவகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்தியதற்காக இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிரியாணி சிக்கன் கறிகளை சுகாதாரமான முறையில் செய்து உணவகத்தை நடத்துமாறு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:சென்னையில் பிரபல பிரியாணி கடையில் பிரியாணியில் புழு, அலட்சியமாகப் பதிலளித்த கடை ஊழியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.