ETV Bharat / state

செப்டம்பருக்குள் சேலத்தில் விமான சேவை - எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி - salem flights

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ள சேலம் விமான சேவை மீண்டும் பயணிகளின் நலன் கருதி மிக விரைவில் தொடங்கும் என்று சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 29, 2023, 5:16 PM IST

சேலம்: விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ். ஆர். பார்த்திபன் எம்பி ”மத்திய அரசின் 'உதான்' திட்டத்தின் கீழ் சேலம் விமான நிலையத்திலிருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக 40 முறைக்கு மேல் மத்திய விமானத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.

அதன் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட சேலம் விமான சேவை வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் மீண்டும் தொடங்கப்படும். இதற்காக அலையன்ஸ் ஏவியேஷன் நிறுவனமும், இண்டிகோ நிறுவனமும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

அலையன்ஸ் ஏவியேசன் நிறுவனம், பெங்களூரு - சேலம், கொச்சின் - சேலம், சேலம் - பெங்களூரு ஆகிய விமான சேவைகளை வாரத்தில் ஏழு நாட்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதே போல இண்டிகோ நிறுவனம் பெங்களூரு - சேலம், ஹைதராபாத் - சேலம், சேலம் - பெங்களூரு ஆகிய சேவைகளை வாரத்தில் நான்கு நாட்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மேலும் சேலம் - சென்னை விமான சேவைக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அதற்காக மீண்டும் மத்திய விமானத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க இருக்கிறேன். அடுத்து நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே சேலம் - சென்னை விமான சேவை தொடங்க அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

சேலம் மட்டுமில்லாது அண்டை மாவட்டங்களில் உள்ள ஜவுளி தொழில் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயில்வோருக்கும் மிகவும் பயனுள்ள விமான நிலையமாக சேலம் விமான நிலையம் உள்ளது.

இதனை மத்திய அரசின் கவனத்திற்கு அவ்வப் போது கொண்டு சென்றோம். தற்போது மீண்டும் உதான் திட்டத்தில் சேலம் விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய எஸ். ஆர். பார்த்திபன், சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக பலர் தாமாகவே முன் வந்து நிலங்களை வழங்கி வருகின்றனர்.

அவர்களுக்கு உரிய நிவாரண நிதி கிடைக்க தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். முதலமைச்சர் அதில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சேலத்தில் நிறமூட்டிகள் கலந்த 3500 கிலோ குழல் அப்பளங்கள் பறிமுதல் - உணவுத் துறை நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.