ETV Bharat / state

கயிறு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: ரூ.15 லட்சம் பொருட்கள் நாசம் - tamilnadu

சேலம்: ஓமலூர் அருகே மின்கம்பி மோதியதில் கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

salem
author img

By

Published : Aug 12, 2019, 9:35 AM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெருமாள் கோயில் பகுதியில் ஆனந்தன் என்பவர் கயிறு திரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று பலத்த காற்று வீசியதால் மின்கம்பி ஒன்றோடொன்று உரசி தொழிற்சாலையில் தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆலையின் உரிமையாளர் ஆனந்தன் ஓமலலூர் ர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களின் உதவியோடு கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் எரிந்த தீயை அணைத்தனர்.

கயிறு ஆலைக்கு நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், இந்த தீவிபத்தில் கயிறு திரிக்கும் இயந்திரங்கள், கயிறு திரிக்கும் மூலபொருட்களான நார்கள் மற்றும் கயிறு கட்டுகள் உட்பட ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தொளசம்பட்டி காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

ஓமலூர் அருகே கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

தொழிற்சாலை அருகே மின்மாற்றி இருக்கும் நிலையில் அதிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மின்கம்பிகள் மரத்தில் உரசிக்கொண்டு இருப்பதை அறியாமல், மின் பணியாளர்கள் அலச்சியமாக இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Intro:ஓமலூர் அருகே மின்சார பணியாளர்களின் அலட்சியத்தால், மின் கம்பிகள் ஒன்றோடொன்று சேர்ந்து , வேப்பமரத்தில் உரசியதால் கயிறு திரிக்கும் தொழிற் சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
 Body:
 
சுமார் 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர்.
 
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெருமாள் கோயில் பகுதியில் மாணிக்கம் என்பவரது மகன் ஆனந்தன் கயிறு திரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று விடுமுறை என்பதால் வேலை ஆட்கள் யாரும் வேலைக்கு வரவில்லை.

அப்பொழுது காற்று பலமாக வீசியதால் தொழிற்ச்சாலையின் அருகே உள்ள வேப்பமரத்தில் மின் கம்பியில் ஒன்றோடொன்று உரசியதால் தீப்பொறிகள் பறந்து வந்து நாரின்மேல் விழுந்துள்ளது இதனால் திடீரென தொழிற்சாலை தீப்பற்றியது. தன்னுடைய கயிறு தொழிற்சாலை எரிவதை பார்த்து அதிர்ச்சியில் ஆலையின் உரிமையாளர் ஓமலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலை அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் நார் மற்றும் இயந்திரங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை உடனடியாக அணைத்தனர். இன்று விடுமுறை என்பதால் வேலையாட்கள் யாரும் பணிபுரியாமல் இருந்ததால் அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் இந்த தீவிபத்தில் கயிறு திரிக்கும் இயந்திரங்கள், கயிறு திரிக்கும் மூலபொருட்களான நார்கள் மற்றும் கயிறு கட்டுகள் உட்பட ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து தொளசம்பட்டி காவல்துறையினர் சம்பவயிடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிற்சாலை அருகே மின்மாற்றி இருக்கும் நிலையில் அதிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மின்கம்பிகள் மரத்தில் உரசிக்கொண்டு இருப்பதை அறியாமல் மின் பணியாளர்கள் அலச்சியமாக இருந்ததால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Conclusion:மாதத்திற்கு ஒருமுறை மின் சேவைகளை நிறுத்தி மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பிகளை பராமரிப்பு செய்து வந்திருந்தால், மரத்தை வெட்டியிருந்தால் இந்த தீ விபத்து நடக்காமல் தவிர்த்திருக்கலாம் என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.