சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஓமலூர் பிரதான சாலையில் குப்புசாமி என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக மரக்கடை உள்ளிட்ட ஹார்டுவேர் பொருள்களை விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார்.
இவரின் கடையில் இன்று (ஜூன் 23) அதிகாலை 4 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
மரக்கடை என்பதால் தீ மளமளவென பரவி கடை முழுவதும் எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஓமலூர், இரும்பாலை தீயணைப்புத் துறையினர் இரண்டு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கப் போராடினர்.
சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து இரும்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்தத் தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஹார்டுவேர் பொருள்கள் எரிந்து நாசமாயின. தீயணைப்புத் துறையினரின் துரித முயற்சியால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இதையும் படிங்க... விபத்தால் மாட்டிக்கொண்ட ரேஷன் அரிசி கடத்தல் லாரி!