கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சேலம் மாநகர பகுதிகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநகரின் முக்கிய பகுதிகளான கொண்டலாம்பட்டி ,நெத்திமேடு உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறையை மீறி செயல்பட்ட 7 இறைச்சிக்கடையில் மாநகராட்சியினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது வீடுகளில் மறைத்து வைத்து விற்கப்பட்ட 40 கிலோ இறைச்சியையும், 65 கிலோ அளவிலான மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இறைச்சி கடை உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறும் பட்சத்தில், காவல் துறை மூலம் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்தனர். இதையடுத்து விதிமுறைகளை மீறி இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட ஏழு கடைகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் மாநகராட்சித் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:பல இடங்களிலிருந்து 3400 லிட்டர் கள்ளச்சாராயம்... வளைத்துப் பிடித்த காவல்துறை!