சுங்கச்சாவடிகளில் தானியங்கி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பாஸ்ட் டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று பாஸ்ட் டேக் அட்டை பெறுவதற்கு இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை பாஸ்ட் டேக் அட்டை பெற கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.
இந்நிலையில், சேலத்தை அடுத்த ஓமலூர் சுங்கச்சாவடியில் வங்கி அலுவலர்கள் மூலம் பாஸ்ட் டேக் அட்டை பெற மையம் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு பாஸ்ட் டேக் அட்டையை வழங்கி வருகின்றனர். மேலும் பாஸ்ட் டேக் அட்டை பெற்ற வாகனங்கள் செல்ல ஓமலூர் சுங்கச்சாவடியில் எட்டு சிறப்பு வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதால் மூன்று நிமிடங்களில் சுங்கச்சாவடியை வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இதனால் காத்திருப்பு நேரமும், வாகன நெரிசலும் குறைந்துள்ளது. பாஸ்ட் டேக் அட்டை பெறாத வாகனங்கள் செல்ல நான்கு வழிதடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் அட்டை பெறாத வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதையும் படிங்க: மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு - கொளத்தூர் அருகே சோகம்!