ETV Bharat / state

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிக்கை..! நெற்றியில் நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம்..!

Farmers Protest in Salem: பசும்பால் மற்றும் எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்கக் கோரி சேலத்தில் விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmers Protest in Salem
சேலத்தில் நெற்றியில் நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம் - பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 4:59 PM IST

சேலத்தில் நெற்றியில் நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம் - பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிக்கை

சேலம்: பசும்பால் மற்றும் எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி, பசும்பால் லிட்டருக்கு ரூ.45 எனவும் எருமைப்பால் லிட்டருக்கு ரூ.54 எனவும் வழங்க வலியுறுத்தி சேலம் ஆவின் பால் பண்ணை முன்பு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெற்றியில் நாமம் போட்டும், கறவை மாடுகள் மற்றும் பால் கேனுக்கு நாமம் போட்டும் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பால் கொள்முதல் விலையைத் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். இல்லை என்றால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களும் அதன் தலைமையிலான தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் மூலம் தோற்கடிக்கப்படுவார்கள்.

தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நாமம் போட்டதை உணர்த்தும் வகையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில்; எங்கள் நெற்றியிலும் மாடுகளின் நெற்றிலும் பால் கேனுக்கும் நாமம் போட்டு எங்களது எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தி உள்ளோம்.

எனவே உடனடியாக தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சபரிமலை பக்தர்களுக்காக விநோத பிரார்த்தனை.. 300 அடி கிணற்றில் 2 மணி நேரம் யோகாசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.