ETV Bharat / state

4 வழிச்சாலை: நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை! - விவசாய சங்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு

சேலம்: நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

farmers
author img

By

Published : Sep 20, 2019, 9:44 PM IST

சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழி சாலைக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை தமிழக அரசு விரைந்து கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலைக்காக நிலம் கொடுத்து விட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இழப்பீடு தொகை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

விவசாய சங்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தும் பலனில்லை. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இழப்பீடு கேட்டு நான்காயிரம் விவசாயிகள் மனு அளித்திருந்தோம். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் மனுக்களை மாவட்ட நிர்வாகம் தள்ளுபடி செய்துவிட்டது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளின் நிலத்திற்கு மார்கெட் நிலவரப்படி இழப்பீடு தொகையை கொடுத்துவிட்டு தமிழக அரசு எட்டு வழிச்சாலை திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மண்டபத்தில் அடைப்பு!

Intro:சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழி சாலைக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை தமிழக அரசு விரைந்து கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Body:சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோபாலகிருஷ்ணன்," சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழி சாலைக்காக நிலம் கொடுத்து விட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இழப்பீட்டு தொகை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தவித்து வருகின்றனர் .

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து மனு அளித்தும் பலனில்லை . சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இழப்பீடு கேட்டு நான்காயிரம் விவசாயிகள் மனு அளித்து இருந்தோம்.

அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் மனுக்களை மாவட்ட நிர்வாகம் தள்ளுபடி செய்துவிட்டது . இதை வன்மையாக விவசாயிகள் கண்டிக்கிறோம்.

சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் ஏழை எளிய மற்றும் விவசாயிகள் அளிக்கும் புகார்கள் மீது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனையும் கருத்தில் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக நான்கு வழி சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளின் நிலத்திற்கு மார்க்கெட் நிலவரப்படி இழப்பீட்டு தொகையை கொடுத்துவிட்டு தமிழக அரசு எட்டு வழி சாலை திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் " என்று கூறியுள்ளார்.

Conclusion:இந்த செய்தியாளர் சந்திப்பில் நான்குவழி சாலை அமைப்பதற்கு நிலம் கொடுத்துவிட்டு பாதிப்பை விவசாயிகளின் சங்கத்தினர் ஆகியோரும் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு இழப்பீடு தொகை கேட்டு வலியுறுத்தினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.