சேலம் மாவட்டம் வீராணம் அடுத்த சின்ன வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன்(61). இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில்," சின்ன வீராணத்தில் எனது தந்தை எனக்கு பாகப்பிரிவினை செய்து வழங்கிய நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வருகிறேன்.
என் உடன் பிறந்தவர்களுக்கும் அவ்வாறே எனது தந்தை பாகப்பிரிவினை செய்து கொடுத்தார். இந்த நிலையில் எனது அக்கா வள்ளியம்மாள், அவருடைய மகன்கள் பிரகாஷ், பத்மநாபன் ஆகியோர் எனது நிலத்தை தங்களுக்கு கொடுக்க வலியுறுத்தி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
நான் திருமணம் ஆகாதவன். அதனால் என்னிடமிருந்து நிலத்தை பிடுங்க அவர்கள் பல்வேறு வகையில் தொல்லைகள் துன்பங்கள் கொடுத்து வருகிறார்கள்.
நிலத்தை நான் கொடுக்க மறுத்தால் என்னை கொன்றுவிடுவதாக அவர்கள் மிரட்டி என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வீராணம் காவல் நிலையம், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், அஸ்தம்பட்டி உதவி ஆணையர் அலுவலகம் என்று அனைத்து காவல் துறை அலுவலகத்திலும் புகார் அளித்து வருகிறேன்.
ஆனால் அக்காள் மகன் பிரகாஷ் வருவாய்த்துறையில் அலுவலராகப் பணிபுரிந்து வருவதால் அந்த பவரை பயன்படுத்தி காவல் துறை தன் மீது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொண்டு வருகிறார்.
பாதிக்கப்பட்ட நபருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையை பணம் கொடுத்து தன் பக்கம் அவர் சேர்த்துக்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.
எந்த நேரமும் எனக்கு ஏதாவது நேர்ந்து விடும் என்ற அச்சத்தில் நாட்களைக் கழித்து வருகிறேன். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளித்து, எனது நிலத்தை பாதுகாக்கும் வகையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து உறவினர்களிடமிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து குமரேசன் கூறுகையில்," கொலை மிரட்டல் விடுக்கும் உறவினர்களிடமிருந்து காவல்துறை நடவடிக்கை மூலமே என்னை காப்பாற்றி என் உயிரையும் உடமையையும் பாதுகாக்க முடியும் என்பதால், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.
எனது பிரச்சனை குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வரையில் அனைத்து இடங்களுக்கும் புகார் மனு அளித்து இருக்கிறேன்.
ஆனால் இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மிகுந்த மன உளைச்சலில் தவித்து வருகிறேன்" என்றார்.
மிரட்டும் உறவினர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி மனு
சேலம்: தனக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சித்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் உறவினர்களிடமிருந்து காப்பாற்ற கோரி விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.