ETV Bharat / state

எடப்பாடி தொகுதியில் களம் காணும் முதலமைச்சர் - அதிமுக

சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் களம் காண்கிறார். அவரது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பதைப் பார்க்கலாம்.

எடப்பாடி தொகுதியில் களம் காணும் முதலமைச்சர்

author img

By

Published : Mar 18, 2021, 3:39 PM IST

Updated : Mar 19, 2021, 12:45 PM IST

எடப்பாடி சட்டபேரவைத் தொகுதி தமிழ்நாட்டின் நட்சத்திரத் தொகுதியாகும். முதலமைச்சர் பழனிசாமியை தமிழ்நாட்டுக்குக் கொடுத்த தொகுதி என்பதால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனமும் எடப்பாடி தொகுதியில் குவிந்துள்ளது. இன்றைய அரசியல் களத்தில் எடப்பாடி தவிர்க்க முடியாத தொகுதி என்பதில் ஐயமில்லை.

இந்தத் தொகுதி மக்களின் கோரிக்கைகளில் பலவற்றை நிறைவேற்றித் தந்துவிட்டதாகக் கூறி எடப்பாடிக்குள் வரும்போதெல்லாம் முதலமைச்சர் பெருமிதம் கொள்வார். எடப்பாடி முழுக்க பளபளக்கும் சாலைகள், நகருக்கு வெளியே சுற்றுச்சாலைகள், கிராமங்களில் தரமான தார்ச் சாலைகள், மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், அரசுக் கல்லூரிகள், விடுதிகள், சரபங்கா ஆறு தூர்வாருதல் என திரும்பிய பக்கமெல்லாம் எடப்பாடி பழனிசாமி பெற்றுத் தந்த திட்டங்கள் ஏராளம் உண்டு.

அதேபோல மேட்டூர் அணையின் உபரி நீரை எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பி விவசாயிகளின் நூற்றாண்டு கண்ணீரைத் துடைத்து, வறண்ட நிலங்களில் உழவு செழிக்க வைத்ததும் எடப்பாடி பழனிசாமிதான்.

எடப்பாடி தொகுதியில் களம் காணும் முதலமைச்சர்

ஆனால் இத்தொகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் வேலைவாய்ப்பின்றி வறுமையில் வாழ்க்கையை நடத்த முடியாமல் திணறி வருவதை நமது கள ஆய்வு உணர்த்தியது.

எடப்பாடி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 378 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 4, 500 பேர் புதிய வாக்காளர்கள். சரி எடப்பாடி தொகுதி கள நிலவரம் யாருக்கு சாதகமாக உள்ளது?

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய எடப்பாடி தொகுதியைச் சேர்ந்த இளைஞர் முத்தமிழ்ச்செல்வன், "கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் ஆங்காங்கே சாலைகள் மட்டும்தான் போடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு இல்லாமல் சுமார் 15 ஆயிரம் பட்டதாரிகள் இருக்கிறோம். எம்.எஸ்.சி. படித்த நான் வேலையின்மையால், தற்போது மில் வேலைக்குத்தான் செல்கிறேன்.

எடப்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் கூறுகையில், "எடப்பாடியை இந்தியா முழுக்க பிரபலமாக்கியவர் முதலமைச்சர் பழனிசாமி. இத்தொகுதியைப் பொறுத்தவரை குறைகள் ஒன்றுமில்லை. ஆனால் நிறைகள் குறைவாகத்தான் உள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி பல திட்டங்களை நிறைவேற்றிய போதிலும், தொகுதிக்கு அதிக திட்டங்கள் தேவைப்படுகின்றன. எனவே அவர் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும். மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். சரபங்கா நதியைத் தூர்வாரி அதில் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அது மிகப்பெரிய சாதனை" என்றார்.

நைனாம்பட்டியை சேர்ந்த ராஜா கூறுகையில், "முதலமைச்சர் பழனிசாமி மக்களுக்கு தேவையான பாலத்தைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். இதனால் கிராம மக்கள் எளிதாக எடப்பாடிக்கு வர முடிகிறது. கரோனா காலத்தில் நிவாரண உதவிகளையும் தந்தார்" என்று தெரிவித்தார்.

ஜலகண்டபுரம் பகுதி சிவராமன் மற்றும் ரங்கநாதன் கூறுகையில், "கருணாநிதி, ஜெயலலிதா என பெரும் தலைவர்கள், முதலமைச்சர்கள் என்று யாரும் செய்ய முடியாத காரியத்தை செய்தவர் எடப்பாடி பழனிசாமி. மேட்டூர் உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியவர். இது காலமுள்ளவரை நிற்கும். காவிரிக்கரையின் அடியில் உள்ள வறண்ட கிழக்குப் பகுதியான எடப்பாடி தொகுதி வளமாக அவர்தான் காரணம்" என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

திமுக சார்பில் களம்கண்டுள்ள வேட்பாளர் சம்பத்குமார் நமக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், "சாலைகள் மட்டும் போதுமா, மக்கள் வாழ வேலைவாய்ப்பு வேண்டாமா, அதற்கு எதுவுமே எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை. அதனால் திமுகவிற்கு வேலைவாய்ப்புத் தர தொகுதி மக்கள் முடிவு செய்து விட்டார்கள்" என்றார்.

"தொகுதி மக்களின் பேராதரவோடு வென்று, ஆட்சிக்கு வந்ததும் படித்தவர்களுக்கு வேலை வழங்குவோம். எடப்பாடி பழனிசாமி பணத்தை நம்பி நிற்கிறார். நான் மக்களின் செல்வாக்கை நம்பி நிற்கிறேன் " என்கிறார் சம்பத்குமார் வலுவான நம்பிக்கையோடு.

எம்எல்ஏவாக தேர்வாகி, அமைச்சராக இருந்து முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமி, மீண்டும் தேர்தலில் வெல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க: விவசாயிகளிடமிருந்து ஒரு வாக்காவது வாங்க முடியுமா...ஸ்டாலினுக்கு பழனிசாமி சவால்!

Last Updated : Mar 19, 2021, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.