ETV Bharat / state

ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் : எடப்பாடி பழனிசாமி - ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்

சேலம்: ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என அரசிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்

author img

By

Published : May 28, 2021, 3:49 PM IST

சேலம் அரசு மருத்துவமனையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே.28) ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 'சேலம் மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் பாதித்த நிலையில், மூச்சுத்திணறல் காரணமாகப் பலர் உயிரிழந்திருக்கின்றனர். சேலம், ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஐசியூ வார்டுகளில் 1,153 ஆக்ஸிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டன.

ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்
'ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்'

எவரேனும் குணமடைந்தால் தான் புதிதாக தொற்று ஏற்படுவோருக்கு ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்கிறது. ஏற்கெனவே, எங்கள் ஆட்சியில் இருந்த படுக்கைகள் மட்டுமே தற்போது வரை, சேலம் மாவட்டத்தில் உள்ளன. சேலம் மாவட்டம் முழுவதும் 3,800 கோவிட் படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில், 11,700 கோவிட் படுக்கைகள் உள்ளது என தவறான எண்ணிக்கையை அரசு அலுவலர்கள் கொடுக்கிறார்கள். எனவே, ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.

'ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்'

பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும்:

தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 267 பரிசோதனை மையங்கள் மட்டுமே தற்போது வரை உள்ளன. கூடுதலாக இப்போது உள்ள புதிய அரசு அதனை உருவாக்கவில்லை. உடனடியாக பரிசோதனை மையங்களை அதிகரித்து ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன என்பதை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.

  • சேலம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தேன். கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், (1/2) pic.twitter.com/bp0OZ2j5H1

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டக் கூடாது:

கரோனா நோயாளிகளின் இறப்பைக் குறைத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இறப்பு விவரங்களை வெளிப்படைத் தன்மையோடு வெளியிட வேண்டும்.

இறப்பு எண்ணிக்கையை குறைத்துக்காட்டுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதோடு சடலங்களை பல மணி நேரம் காத்திருந்து அடக்கம் செய்ய வேண்டிய நிலையைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்புலன்ஸில் காத்திருந்து உயிரிழந்தவர்களை முறையாக உரிய கவர்களைக் கொண்டு மூடப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

  • கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறார்கள், இறப்பு விவரத்தை தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

    - மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்.

    — AIADMK (@AIADMKOfficial) May 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கிராமப்புறங்களில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்:

முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னர் தளர்வு கொடுத்ததால் 6 லட்சம் பேர் நகர்ப் புறத்திலிருந்து கிராமப் புறத்திற்கு வந்துள்ளனர். அவர்களை முறையாக அரசு கண்காணிக்கவில்லை.
அதனால் கிராமப்புறங்களிலும் வேகமாக நோய்ப் பரவி வருகிறது. அதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

பத்திரிக்கையாளர்களுக்கு இரங்கல்:

அரசு விழிப்போடு இருந்து கறுப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த வேண்டும். கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு அரசு தேவையான நிவாரணம் வழங்க வேண்டும். அதிமுக சார்பில் ரூ.3 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்' என்றார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: சென்னையை முந்தியது கோயம்புத்தூர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.